ஒரே நாளில் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி:விநாயகர், முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

ஒரே நாளில் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-10-13 18:45 GMT

கூடலூர்

ஒரே நாளில் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி

மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி நாட்களில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜையும், சங்கடஹர சதூர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் கிருத்திகை, சங்கடஹர சதூர்த்தி வந்தது. இதைத்தொடர்ந்து காலை முதல் இரவு வரை முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேக் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சந்தனமலை, சூண்டி திருக்கல்யாண மலை, பந்தலூர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்

இதேபோல் சங்கடஹர சதுர்த்தியையொட்டி கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஹோமம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால், இளநீர் உள்ளிட்ட அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு இடங்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



Tags:    

மேலும் செய்திகள்