கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சேதுமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல் குறித்தும், புதிய மின் கம்பங்கள் அமைப்பது குறித்தும், ஏற்கனவே உள்ள மின் கம்பங்களில் புதிதாக மின் கம்பிகள் பொருத்தி மின் விளக்குகள் அமைப்பது, 26 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த கழிவறையை அகற்றுதல், செயல் அலுவலரால் செய்யப்பட்ட செலவு கணக்குகளை அங்கீகரித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.