கிருஷ்ண ஜெயந்தி விழா
பணகுடி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பணகுடி:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தேவிகா பேபி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு நடனமாடினர். மாணவ-மாணவிகள் வண்ண மலர்கொத்துக்களை ஆசிரியர்களுக்கு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.