கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில்பிரதோஷ வழிபாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-10-12 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகத்துடன், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை பட்டர்கள் செண்பகராமன், ரகு ஆகியோர் செய்தனர். பூஜையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்