கோவில்பட்டிபஞ்சாயத்து யூனியன் கூட்டம்

கோவில்பட்டிபஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர்கள் ராஜேஷ் குமார், ராணி, இன்ஜினீயர்கள் மேரி, சங்கர், படிபீவி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடலையூர், ஈராச்சி, கீழ ஈரால், வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு பணி மஸ்தர் பணியாளர்களுக்கு மே மற்றும் ஜூன் மாத சம்பளம் ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 600 அனுமதிக்கப்பட்டது. பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுகாதார பணியாளர் களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாத சம்பளம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அனுமதி அளிப்பது உள்ளிட்ட 43 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்