கோவில்பட்டி நகரசபை சுகாதாரபணியாளர் தூக்கு போட்டு தற்கொலை

கோவில்பட்டி நகரசபை சுகாதாரபணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-17 10:58 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர், அண்ணாநகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சமுத்திரத்திர வேல் (வயது 45). இவர் நகரசபையில் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலையில் நகரசபை வாகனம் நிறுத்தும் வளாகத்தில் நைலான் கயிற்றில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

காலையில் பணிக்கு வந்த சக பணியாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமுத்திரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேற்கு போலீசார், அவர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சமுத்திரவேலுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்