கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக்பள்ளியில் கணித தின கண்காட்சி

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக்பள்ளியில் கணித தின கண்காட்சி நடந்தது.

Update: 2023-03-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சர்வதேச கணித தினவிழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி பொருளாளர் ஜெ.ரத்னராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எஸ். எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை துணை பேராசிரியை த. கபிலா கலந்து கொண்டு மாணவர்களின் கணிதக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசினார். கணித கண்காட்சியில் சிறந்த கண்டு பிடிப்புகளை பார்வைக்கு வைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேச்சு, நடனம், நாடகம், பாடல்கள் நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.தாழையப்பன், பி. தங்கமணி, கே. பால்ராஜ், டி. மனோகரன், பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் கே.பிரபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்