கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோய் சிறப்பு முகாம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோய் சிறப்பு முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொழுநோய், ஊனத் தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கோவில்பட்டி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமில் தூத்துக்குடி மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யமுனா கலந்து கொண்டு ஊனத் தடுப்பு
மற்றும் பராமரிப்பு முறை குறித்து விளக்கி பேசி, பயனாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் இயற்கை சிகிச்சை மருத்துவர் திருமுருகன், பயனாளிகளுக்கு உணவு முறைகள் மற்றும் யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பேசினார்.
முகாமில் துணை இயக்குனர் அலுவலக நலக்கல்வியாளர் செல்லப்பாண்டியன், மேற்பார்வையாளர் ஜான் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, சின்னத்தம்பி, சண்முகசுந்தரம், பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் செண்பக மூர்த்தி செய்திருந்தார்.