கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-06 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற அக்.11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி நேற்று கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை நடந்தன. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் கோவில் முன்பு திருவிழா கால் நடப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும், அக்.11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 20-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 21-ந்தேதி தபசில் இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 22-ந்தேதி இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்