பிரார்த்தனை கூடத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2022-11-21 17:34 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தொரவலூர் அருகே கந்தாம்பாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் இந்து மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் குன்னத்தூரை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊரில் விவசாய நிலத்தை வாங்கி வீடு கட்ட ஊராட்சியில் அனுமதி பெற்றார். அதன்பிறகு கட்டிடம் கட்டி அங்கு பிரார்த்தனை நடக்கிறது. வெளியூரில் இருந்து சிலர் அங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். எங்கள் ஊரை சேர்ந்தவர்களை மதமாற்றம் செய்ய பிரசாரம் செய்கிறார்கள். வீட்டு இணைப்பை பெற்று வழிபாட்டு தலத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அங்கு அசாதாரண சூழல் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

-----

மேலும் செய்திகள்