வெள்ளகோவில் அருகே மாரியம்மன் கோவில் ேதர்த்திருவிழாவை முன்னிட்டு கண்ணபுரம் மாட்டுச்சந்தை, குதிரை சந்தை நடைபெற்றது. இதில் 4 ஆயிரம் மாடுகள் மற்றும் குதிரைகள் வந்திருந்தன.
கண்ணபுரம் மாட்டுச்சந்தை
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழாவும் நடைபெறும். இதைெயாட்டி அந்த பகுதியில் மாட்டு சந்தை கூடும்.
இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள்.
இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நடைபெற உள்ளது, மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
4 ஆயிரம் மாடு, குதிரைகள்
இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத்தொடங்கி விட்டது.
இந்த மாட்டுச்சந்தைக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 4 ஆயிரம் மாடுகள், குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திரளாக வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை, குதிரைகளை வாங்கிச்சென்றனர். மாட்டுச்சந்தை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும் என்று ெதரிவித்தனர்.