புஞ்சைபுளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
புஞ்சைபுளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) மாலை அம்மை அழைத்தல், முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 9 மணிக்கு அரண்மனை பொங்கல், 12 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது.
மாலை 3 மணி அளவில் பக்தர்கள் அலகு குத்தி வருதலும், தேர் இழுத்தலும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 8-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.