அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவிலில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்

அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.

Update: 2023-05-02 21:42 GMT

அறச்சலூர்

அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.

குண்டம் விழா

அறச்சலூரில் புகழ்பெற்ற பொன் அறச்சாலை அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுேதாறும் சித்திரை மாதம் இந்த கோவிலில் குண்டம் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 29-ந் தேதி கோவிலில் கொடி ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. முன்னதாக எரி கரும்புகள் (விறகுகள்) கொண்டுவந்து குவிக்கப்பட்டு இருந்தன. அதன்பின்னர் 40 அடி நீளத்துக்கு குண்டம் அமைக்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

இதைத்தொடர்ந்து அறச்சலூர்-கொடுமுடி கைக்காட்டி பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு பக்தர்கள் சென்று காப்புக்கட்டி புனித நீராடினார்கள். பின்னர் பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு புறப்பட்டனர்். கோவிலுக்கு சென்றதும் பூசாரி மகேந்திரன் பூங்கரகத்துடன் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து முறைதாரர்கள் மற்றும் திரளான ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும், விமான அலகிலும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். விழாைவயொட்டி அறச்சலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்