அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2023-04-07 22:49 GMT

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்டம்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்றதும், புகழ்பெற்றதுமான அந்தியூர் பத்தரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 5-ந்தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மேளதாளங்கள் முழங்க தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தாசில்தார் தாமோதரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்பட ஏரா ளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

3 நாட்கள்

மேளதாளங்களுக்கு ஏற்ப அசைந்து ஆடியபடி தேர் அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்களும் மாலை 5 மணி அளவில் தேர் இழுத்து செல்லப்பட்டு நிலை சேர்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்