சந்திர கிரகணத்தையொட்டி ஈரோட்டில் கோவில்களில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி ஈரோட்டில் கோவில்களில் நடை அடைப்பு
சந்திர கிரகணம் ஏற்பட்டதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று மாலை நடை அடைக்கப்பட்டது. ஈரோடு கோட்டையில் உள்ள ஈஸ்வரன், பெருமாள் கோவில்களில் மதியம் 12 மணிஅளவில் வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் சந்திர கிரகணம் காரணமாக பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மாலை 5.38 மணி முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் தோன்றுவதால், பக்தர்களின் தரிசனுக்கு அனுமதி கிடையாது என்று கோவிலின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு மேல் கோவில்களின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதேபோல் மகிமாலீஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன், திண்டல் முருகன் கோவில் உள்பட ஈரோட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டன.