கோபி அருகே பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
கோபி அருகே பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
கடத்தூர்
கோபி அருகே மூல வாய்க்கால் செங்கலரையில் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் கணபதி ஹோமம் நடந்தது. 9 மணி அளவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. காலை 10 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது
இந்த நிகழ்ச்சியில் கோபி, கரட்டடிபாளையம், கோபிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், பழையவள்ளியாம்பாளையம், மூலவாய்க்கால், நல்லகவுண்டன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டுச்சென்றனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.