அந்தியூரில் முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம்
அந்தியூரில் முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம்
அந்தியூர்
அந்தியூரில் உள்ள முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு காலபூஜைகள், சாமிக்கு கண் திறப்பு ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்ற முன்தினம் காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். அந்தியூர், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.