சத்தியமங்கலத்தில் மகா முனியப்பன் கோவில் திருவிழா

சத்தியமங்கலத்தில் மகா முனியப்பன் கோவில் திருவிழா

Update: 2022-08-14 22:44 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கொமராபாளையம் தவளகிரி முருகன் கோவிலுக்கு கீழே மகா முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி வடக்குப்பேட்டை திருநீலகண்ட சாமி வீதியில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் பூஜைகள் செய்தனர். பின்னர் மகா முனியப்பன் கோவிலுக்கு தாரை தப்பட்டை முழங்க மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக வந்தார்கள். அங்கு சிறப்பு அபிஷேகத்துடன், பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடாய்களை வெட்டினார்கள். பின்னர் அங்கேயே சமையல் செய்யப்பட்டு அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவிலில் ஒரு பகுதியில் திருமணத்தடை நீங்கும் பாலமரம் ஒன்று உயரமாக வளர்ந்துஇருக்கிறது. இந்த மரத்திற்கு கீழே திருமணம் நடப்பது போன்ற ஒரு சிலையும் உள்ளது. இதன் முன்பு திருமணமாகாதவர்கள் வேண்டி பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினால் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்ற ஐதீகமாக உள்ளது. அதன்படி ஏராளமான இளைஞர்களும், பெண்களும் அந்த மரத்துக்கு கீழ் நின்று பயபக்தியுடன் வணங்கி திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்