குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு கலெக்டர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார்.

Update: 2022-07-30 16:29 GMT

குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில் சின்னம் வடிவமைத்து அனுப்புபவரை தேர்வு செய்து ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்து இருந்தார். அதன்படி, தென்காசியை சேர்ந்த விக்னேஷ் அனுப்பிய சின்னம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசுத்தொகையான ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்