கொட்டங்காடு புரட்டாசி திருவிழா: அம்மன் வெள்ளை பூஞ்சப்பரத்தில் வீதிஉலா

கொட்டங்காடு புரட்டாசி திருவிழாவில் அம்மன் வெள்ளை பூஞ்சப்பரத்தில் வீதிஉலா நடந்தது.

Update: 2022-09-21 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(வியாழக்கிழமை) 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து அம்மன், பவளமுத்து விநாயகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்