கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

பறக்கை அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-12-22 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே உள்ள பொட்டல்விளையை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது40), கொத்தனார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த ஜோதிலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்