சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கொரிய வர்த்தக கண்காட்சி...!

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கொரிய வர்த்தக கண்காட்சி நாளை மறுநாள் வரை நடக்கிறது.

Update: 2022-11-18 02:03 GMT

சென்னை,

இந்தியாவில் இயங்கி வரும் கொரியன் டிரேட் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் ஏஜென்சி சார்பில் கொரிய வர்த்தக கண்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சி குறித்து கொரியன் டிரேட் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் ஏஜென்சியின் இயக்குனர் ஜிஹ்வான் இயுன் கூறியதாவது:-

கொரியாவின் மிகச்சிறந்த நுகர்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், உணவுப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், பேஷன் மற்றும் ஜூவல்லரி பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கொரியாவைச் சேர்ந்த 20 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 'கொரிய தயாரிப்புகளை விரும்பும் இந்தியா' என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடக்கிறது.

கொரிய தயாரிப்புகளை பொதுமக்கள் நேரடியாக கொரிய நிறுவனங்களிடம் இருந்து பெற வசதியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரிய தயாரிப்புகளை அனுபவித்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரிய உணவுப்பொருட்களை சுவைத்து பார்த்தும், அழகு சாதன பொருட்களை உபயோகித்து பார்த்தும் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வணிகத்தை மேம்படுத்த சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர கொரிய பாப் இசை, நடனம், நாடகம் உள்ளிட்டவற்றை பார்வயைாளர்கள் கண்டுகளிக்கலாம். கண்காட்சிக்கு நேரடியாக வர முடியாதவர்கள் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த கண்காட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.    

Tags:    

மேலும் செய்திகள்