நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக அரசு தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது " திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்றனர்.
---------------