திருச்செங்கோட்டில் ரூ.4 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

Update: 2023-06-23 18:45 GMT

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் முதல் தரம் கிலோ ரூ.70 முதல் ரூ.77 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.52 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் 110 கொப்பரை தேங்காய் மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்