கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

Update: 2023-05-02 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 64 விவசாயிகள், 462 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 4 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 245 மூட்டை முதல் ரக கொப்பரை ஒரு கிலோவுக்கு 71 ரூபாய் 50 காசுகள் முதல் 82 ரூபாய் 50 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 158 மூட்டை இரண்டாம் ரக கொப்பரை ஒரு கிலோவுக்கு 54 ரூபாய் முதல் 70 ரூபாய் 40 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் கடந்த வார விலையில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளது. மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் 51 மூட்டைகள் குறைந்து இருந்தது என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்