கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

Update: 2023-07-25 21:00 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 48 விவசாயிகள் 259 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி தீ நடந்தது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 8 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 120 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோவுக்கு ரூ.70 முதல் 78 ரூபாய் 55 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 139 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோவுக்கு ரூ.58.89 முதல் ரூ.70 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட 186 மூட்டைகள் வரத்து குறைந்து உள்ளது. மேலும் கிலோவுக்கு ரூ.2.59 விலை அதிகரித்து உள்ளது என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்