கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 30-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-08-24 15:10 GMT

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.

வாலைகுருசுவாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் வாலைகுருசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொங்கணர் சித்தர் குறிப்பிட்டுள்ள வாலை என்னும் சித்தர்கள் வழிபட்ட பாலாதேவி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பாலா என்றால் பத்து வயதுள்ள ேதவி ஆவார்.

இங்கு வாலைகுருசுவாமியும், அவரது சீடர் காசியானந்தரும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஆவணி பெருவிழா நடக்க உள்ளது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் ெதாடங்கி உள்ளன. வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகமும், மறுநாள் (30-ந் தேதி) ராஜகோபுர கும்பாபிஷேகமும் நடக்கிறது.

இதையொட்டி அன்று அதிகாலையில் 6-ம் கால யாகபூஜை உள்ளிட்ட வேள்வி பூஜைகளும், காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஜகோபுரம், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

ஆவணி பெருவிழா

அன்று காலை 9 மணிக்கு வாலைகுருசுவாமி கோவில் ஆவணி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதைதொடர்ந்து இரவு விநாயகர், வாலாம்பிகை சிறிய சப்பரத்திலும், பாலா திரிபுரசுந்தரி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். இந்த திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூைஜ, சாயரட்சை பூஜை, அலங்கார தீபாராதனை நடந்து, இரவில் அம்மன் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை வாலைகுருசுவாமி கோவில் பக்த குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்