கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மந்தித்தோப்பு நரிக்குறவர்கள் கலியமூர்த்தி தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மஞ்சத்தோப்பு மலையடி வாரத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும், பொது இடத்தையும் ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் பாலு, நகர துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.