விவசாயிக்கு கத்திக்குத்து

இளையான்குடி அருகே விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-26 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள பெரியவண்டாலை கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து குடும்பத்தினருக்கும், ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காத்தமுத்து மகன்கள் விவசாய நிலத்தின் வரப்பை பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்த போது ஆறுமுகத்தின் வயல்வெளியில் இருந்த குழாய் உடைந்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம்(வயது 60), அவரது மகன் சிவபிரகாஷ்(25), உறவினர் சந்திரபோஸ்(40) ஆகிய 3 பேரும் காத்தமுத்து மகன்கள் திருநாவுக்கரசு(51), மகா கிருஷ்ணன்(33) ஆகியோரை தாக்கினர். விவசாயியான திருநாவுக்கரசுக்கு கத்திக்குத்து விழுந்தது. மகா கிருஷ்ணனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து காத்தமுத்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட 3 பேர் மீது இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்