நெல்லிக்குப்பம் அருகே விவசாயிக்கு கத்திவெட்டு 2 பேர் கைது

நெல்லிக்குப்பம் அருகே விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-09-15 18:45 GMT


நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 39). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணதேவன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று ராஜசேகரனின் தந்தை தட்சிணாமூர்த்தி மாடு ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற அருணதேவன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அவர் தட்சிணாமூர்த்தியிடம், உங்களால் தான் நான் கீழே விழுந்தேன் என்று கூறி, வாக்குவாதம் செய்தார். இது அவர்களுக்கிடையே தகராறாக மாறியது. இதை தொடர்ந்து, அருணதேவன் மற்றும் அவரது தம்பிகள் 3 பேர் சேர்ந்து ராஜசேகரனை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் போலீசில் அளித்த புகாரின் பேரில் அருணதேவன், அவரது தம்பிகள் ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் அருணதேவன், ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்