ஆற்காட்டில் ரூ.24 லட்சத்தில் சமையல் கூடம்
ஆற்காட்டில் ரூ.24 லட்சத்தில் சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின் படி ஆற்காடு நகரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான சமையல் கூடம் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிடப்பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், இளநிலை பொறியாளர், நகர மன்ற உறுப்பினர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.