மழலையர்கள் பட்டமளிப்பு விழா

சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீசேவுகமூர்த்தி (எஸ்.எஸ்) மெட்ரிக் பள்ளியில் 13-வது ஆண்டாக நேற்று மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-01 18:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீசேவுகமூர்த்தி (எஸ்.எஸ்) மெட்ரிக் பள்ளியில் 13-வது ஆண்டாக நேற்று மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சர்க்கரை நோய் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மதுரை உமையாள் அரவிந்த் குமார் (ஆர்.ஆர் மருத்துவமனை) கலந்து கொண்டு பேசும் போது:-

காலை உணவு மாணவர்கள் சிந்திக்க செயலாற்ற உதவுவதால் காலை உணவு உட்கொள்வது இன்றியமையாது. செல்போன் பயன்படுத்தும் போது பெற்றோர் கண்காணிப்பு அவசியம். துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அதிக தண்ணீர் பருக வேண்டும். முட்டை, பால், காய்கறி மற்றும் பழங்களை அன்றாட உணவாக உட்கொள்ள வேண்டும் என்றார்.

பள்ளி தலைவர் செந்தில்குமார் பேசும் போது, குழந்தையும் தெய்வமும் என குறிப்பிட்டார். பள்ளிச்செயலாளர் சந்திரசேகர் கூறும் போது, குழந்தைகளிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது என்பது ஒரு கலையாகும் அதனை சிறப்பாக செய்து வருகிறோம் என பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி பெருமையாக குறிப்பிட்டார்

அதனைத் தொடர்ந்து யு.கே.ஜி. படித்த 70 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் மற்றும் தலைவர். தாளாளருடன், பள்ளி முதல்வர் இணைந்து வழங்கினார்கள். விழாவில் குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்தல், நடனம், உரையாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசேவுகமூர்த்தி (எஸ்.எஸ்) மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பி.பிவெர்லி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்