கிணத்துக்கடவு, நெகமத்தில் மது விற்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவு, நெகமத்தில் மது விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-02 18:45 GMT

நெகமம்

நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரப்பாடி பிரிவு அருகே போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், புதுக்கோட்டை மாவட்டம் புரசமுடியை சேர்ந்த ராஜேஷ் (வயது27) என்பதும், மதுப்பாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள கழிப்பிடம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், கூடலூர், மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்