வாகனம் மோதி தொழிலாளி பலி

சூளகிரி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-31 16:57 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் கொல்லப்பள்ளியில் உள்ள தாபா ஓட்டல் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்