கழுகுமலையில் பெண்ணுக்கு கொலைமிரட்டல்: பெயிண்டர் கைது
கழுகுமலையில் பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
கழுகுமலை:
கழுகுமலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபில்ராஜ். பெயிண்டர். இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 38). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ஆறுமுகம் மகன் ராஜ்குமாருக்கும் (33) தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. ராஜ்குமாரும் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராஜலட்சுமியின் வீட்டிற்கு சென்ற ராஜ்குமார், அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.