பிளஸ்-2 மாணவி கடத்தல்

விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டாா்.

Update: 2022-08-13 18:07 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று அம்மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்தவரை திடீரென காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்கள் மகளை, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மகனான இருசக்கர வாகன மெக்கானிக் விஜய் (21) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற விஜயையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்