சேலத்தில் பரபரப்பு புதுப்பெண் காரில் கடத்தல்-போலீசார் விசாரணை

சேலத்தில் புதுப்பெண் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காதல் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-12-20 20:14 GMT

காதல் திருமணம்

சேலம் மாவட்டம் தலைவாசல் சிவசங்காரபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது24). நெல் அறுவடை எந்திர தொழிலாளி. இவர் சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நானும், தலைவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நானும், என்னுடைய காதலியும் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம்.

காரில் கடத்தல்

சேலத்தில் இருந்தால் எங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து நானும், என்னுடைய காதல் மனைவியும் ஊட்டி செல்ல முடிவு செய்தோம். அதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்தோம். நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்படதயாரானோம்.

அப்போது 4 பேர் வந்தனர். என்னை தாக்கி விட்டு என்னுடைய மனைவியை கடத்தி சென்று விட்டனர். எனவே என்னுடைய காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த வாலிபர் போலீசில் புகார் அளித்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் காரில் கடத்தப்பட்டதும், அவருடைய காதல் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளதும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்