பள்ளி மாணவியை கடத்தியவர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் பகுதியை சேர்ந்த திருமணமான ராஜ்(வயது 40) என்பவர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.