சிறுமியை கடத்திய வாலிபர் கைது
நெல்லை அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள் பொட்டலூரணியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 27). இவருக்கும் நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நெல்லையப்பன் அந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லையப்பனை கைது செய்தனர்.