ரிக் வண்டி கடத்தல்

Update: 2023-04-04 18:45 GMT

பாலக்கோடு அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). ரிக் வண்டி உரிமையாளர். இவர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த 3-ந் தேதி அதியமான்கோட்டை பைபாஸ் சாலை அருகே ரிக்வண்டி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ரிக்வண்டியை கடத்தி சென்று விட்டது. அந்த ரிக் வண்டியில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ரிக் வண்டி மற்றும் அதிலிருந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்