கோவையில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரள வீரர் சாம்பியன்

கோவையில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரள வீரர் சாம்பியன்.

Update: 2022-06-19 16:54 GMT


எம்.ஆர்.எப். மோகிரிப் சூப்பர் கிராசிங் சாம்பியன்ஷிப்- 2022 என்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 5 வயது முதல் 50 வயது வரை உள்ள வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அதில் 5 மற்றும் 6 வயது சிறுவர்கள் 2 பேர் இந்த போட்டியில் பங்கேற்று சிறுவர்களுக்கான இருசக்கர வாகனங்களை இயக்கி அசத்தினர். இந்த போட்டியானது வழக்கமான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தும் சாலையில் நடக்காமல் ஆங்காங்கே சறுக்குகள் மற்றும் மேடு போன்று மணல் மேடுகள் வைக்கப்பட்டு அதில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் உயரே பறந்து சென்று சாகசம் செய்யும் வகையில் போட்டி நடந்தது.

இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கேரளாவை சேர்ந்த ஜினான் சி.டி. என்ற வீரர் பெற்றார். அவருக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்