திருமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழில் அதிபர் பரிதாப சாவு
திருமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள தொழில் அதிபர் உயிரிழந்தார்.
திருமங்கலம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). தொழில் அதிபரான இவர், அப்பகுதியில் டெக்ஸ்டைல் மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் பிரதாப் சந்திரன் ளமற்றும் டெக்ஸ்டைல் மேலாளரான தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன்(45), அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா(37) ஆகிய 3 பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்க காரில் வந்தனர்.
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் பிரதாப் சந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேர் காயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரதாப் சந்திரன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.