கெங்கையம்மன் சிரசு திருவிழா

ஆம்பூரில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-31 12:49 GMT

ஆம்பூர் ஏ கஸ்பா கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. ஆம்பூர் ஏ கஸ்பா ரோடு வழியாக சிரசு கோவிலை சென்றடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, ஆடு, கோழிகள் பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினார்கள்.

அம்மன் சிரசு ஊர்வலத்தை காண மாடிகளிலும், சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் அம்மனை தரிசனம் செய்தனர். இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்