கெங்கையம்மன் திருவிழா
சென்னங்குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு விநாயகர் அபிஷேகம், கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், காளியம்மன், பொன்னியம்மன் பூப்பல்லக்கு வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
அம்மன் சிரசு அருகிலுள்ள சிவன் கோவிலில் இருந்து, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோவிலில் அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உடலில் பொருத்தி, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், இரவு வாண வேடிக்கை ஆகியவையும் நடைபெற்றன.