கைப்பந்து போட்டிக்கு கீழச்சிவல்பட்டி மாணவர்கள் தேர்வு

மாநில கைப்பந்து போட்டிக்கு கீழச்சிவல்பட்டி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

Update: 2023-10-22 18:45 GMT

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு பள்ளி குழு தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார். பொருளாளர் அம்மையப்பன் செட்டியார், பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் முருகப்பராஜா தலைமை ஆசிரியை வள்ளியம்மை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலர் வெங்கடாசலம் செட்டியார் போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இப்போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அணிகள் சார்பாக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 20-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் அணி மேலாளர்கள் கலந்து கொண்டு நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாசு, மூர்த்தி, அழகுமீனாள் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 14, 17, 19, வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடைபெற்ற போட்டிகளில் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறக் கூடிய போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்