கயத்தாறுவட்டார விவசாயிகளுக்கு பயிற்சி

கயத்தாறுவட்டார விவசாயிகளுக்கு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-11-30 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு வட்டார விவசாயிகள் 50 பேர் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பயிர்களை தாக்கும் நோய்கள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாஸ்கரன் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயம் தொழில்களை மேற்கொள்வது எப்படி? என பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் பேராசிரியர் மனோகரன் உரங்கள் தயாரித்தல் குறித்து விளக்கம் அளித்தார். இதில் விவசாயிகளுக்கு பருத்தி, மக்காச்சோளம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி திடலில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. வானிலை கண்காணிப்பு கருவியை விவசாயிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதில் வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நடராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரத்தினம்பால், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்