காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்
காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன், கல்வி புரவலர்கள் அசோக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் ஜெகதீஸ் பெருமாள் பார்வையாளராக செயல்பட்டார். இதில் பெற்றோர்களின் ஆதரவு பெற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு தக்க உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
-------------