திரைப்பட பாடலாசிரியர்கள் பங்கேற்ற கவியரங்கம்-கவிஞர் பா.விஜய் பங்கேற்பு

திரைப்பட பாடலாசிரியர்கள் பங்கேற்ற கவியரங்கில் கவிஞர் பா.விஜய் பங்கேற்றார்.

Update: 2023-04-05 16:42 GMT

திரைப்பட பாடலாசிரியர்கள் பங்கேற்ற கவியரங்கில் கவிஞர் பா.விஜய் பங்கேற்றார்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நகர தி.மு.க. சார்பில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திரைப்பட பாடலாசிரியர்கள் பங்கேற்ற சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி சி.சண்முகம், மாவட்ட பிரதிநிதிகள் குட்டி க.புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ஜீவரேகா விஜயராஜ் வரவேற்றார்.

இதில் 'உலக விடியல் உதய சூரியன்' என்ற பொது தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கிற்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் தலைமை தாங்கினார். அதில் 'இந்தியா போற்றும் முதல்-அமைச்சர்' என்ற தலைப்பில் கவிஞர் சொற்கோ கருணாநிதி, 'தலைவர்கள் வாழ்த்தும் தலைவர்' என்ற தலைப்பில் கவிஞர் இளையகம்பன், 'முத்தமிழறிஞரின் புதல்வர்' என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிாியதர்ஷினி, 'என்றென்றும் இளைஞர்' என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை பாடினர்.

விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா ப.விஜயரங்கன், ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், ஆராஞ்சி ஆறுமுகம், த.ரமணன், கோ.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விஜயராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்