கத்திரி வயலை தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு

கத்திரி வயலை தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு

Update: 2023-08-28 18:45 GMT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயி செல்வராஜ் பயன் அடைந்தார். இவரது கத்திரி வயலினை நேற்று சென்னை தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் பிருந்தாதேவி ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலைத்துறையின் கீழ் கத்திரி நாற்றுகள் மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து மார்ச் மாதம் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை நிலை, விற்பனை விலை மற்றும் சந்தைப்படுத்துதல் விவரம் பற்றி விவசாயியிடம் பிருந்தாதேவி கேட்டறிந்தார்.ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன், திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) திவ்யா, திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்