கட்டாரிமங்கலம் கோவிலில்தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
கட்டாரிமங்கலம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
தட்டார் மடம்:
கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி சுவாமியை வழிப்பட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை தலைமையில் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.